வாரணாசியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்ட அன்னபூரணியின் சிலை கனடாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி அது மீண்டும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
மத்திய அரசு அந்த சிலையை இன்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைக்கவுள்ளது.
சுமார் 17 அங்குலம் உயரமும் 9 அங்குலம் அகலமும் கொண்ட இந்த சிலை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் 157 சிலைகள், ஓவியங்கள் இந்தியாவிடமிருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.