இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அரசியல், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள்குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்திய மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.