கொரோனா கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறிப்பாக, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிக உயர்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது மக்கள் தங்களின் உயரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வழங்குகின்ற பங்களிப்புக்கு அமையவே, தொற்று பரவல் கட்டுப்படுத்த்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் கொரோனா கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் மக்கள் அதற்கு எதிர்மறையாக நடந்துகொண்டால், மீண்டும் பயணக் கட்டுப்பாடு போன்றதொரு சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.