2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர், அவுஸ்ரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதி செய்துள்ளது.
இந்த போட்டிகள் ஒக்டோபர் 16ஆம் திகதி தொடங்கும். இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் திகதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலோங், ஹோபார்ட், மெல்பேர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறும்.
முதல் அரையிறுதி நவம்பர் 9ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி நவம்பர் 10ஆம் திகதி அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.
தொடரின் சுப்பர்-12 சுற்றில், நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடும்.
முதல் சுற்றில் நமீபியா, ஸ்கொட்லாந்து, இரண்டு முறை சம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் 2014 சம்பியனான இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இதில் நான்கு அணிகள் தகுதிச் சுற்று மூலம் தகுதிபெறும்.
இந்த தொடர், ஆரம்பத்தில் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நடத்தப்பட வேண்டும். ஆனால் தொற்றுநோயைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.