நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் வானிலை நிகழ்வு என்று அதிகாரிகளால் விவரிக்கப்பட்ட புயல், கனடாவின் வான்கூவர் நகரை கடுமையாக பாதித்துள்ளது.
புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு கடற்கரை நகரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான சேதமடைந்ததுள்ளன.
கடந்த திங்கட்கிழமை வீசிய பாரிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை நெடுஞ்சாலை அருகே இடம்பெற்ற நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார் என்றும் குறைந்தது இரண்டு பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் வான்கூவரில் இருந்து 250 கிமீ ( தொலைவில் உள்ள லில்லூட் அருகே பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.