நாடாளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது ‘நந்தி ஒழிக’ என்ற பதாதைகள் ஏந்தி எதிர்ப்பு வெளியிட்டமைக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அந்த பீடம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்து மத மக்களின் மனதை இவ்விடயம் பெரிதும் புண்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நந்தீஸ்வரர் வழிபாடு சிவ ஆலயங்களில், சிவ பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றதென்றும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நந்தி ஒழிக என்ற பதாதை இந்து மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்பதாதையை தாங்கியதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்து மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என சர்வதேச பீடம் சார்பாக சிவாச்சாரியார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.