அருந்தகங்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து வைக்க கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தின் போது கொவிட் அனுமதி பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், டிசம்பர் தொடக்கம் வரை விருந்தோம்பல் துறைக்கு கொவிட் அனுமதி பத்திரங்களை அறிமுகப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறினார்.
கொவிட் விதிமுறைகளின் சமீபத்திய 21 நாட்ள் மதிப்பாய்வை வெளியிட்டபோது முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வியாழன் சமீபத்திய மதிப்பாய்வைத் தொடர்ந்து, அடுத்த மூன்று வாரங்களில் விதி மாற்றங்கள் எதுவும் இருக்காது.
தொற்று வீதங்கள் உயர்ந்து, தேசிய சுகாதார சேவை மீதான தொற்றுநோய் அழுத்தங்கள் அதிகரித்தால், விருந்தோம்பல் துறைக்கு கொவிட் அனுமதி பத்திரங்கள் பயன்பாட்டை நீடிக்கும் விருப்பத்தை அரசாங்கம் வைத்திருக்கும்.
நாங்கள் பொது சுகாதார நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், நாங்கள் கிறிஸ்மஸுக்கு தயாராகும் போது விருந்தோம்பல் துறையுடன் இணைந்து செயற்படுவோம்’ என கூறினார்.