இயற்கை வளங்களை காப்போம் எனும் கோரிக்கையை முன்வைத்து திருகோணமலை வெருகல் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நடாத்தப்படும் மண் கொள்ளையினைக் கண்டித்து கண்டணப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் வெருகல் பிரதேச வாசிகள் பங்கேற்றிருந்தனர்.
மணல் அகழ்விற்கான அனுமதிகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் குறித்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படக்கூடிய அளவினை விடவும் கூடுதலான மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமையால் அப்பகுதியில் பாரியளவில் பாரிய அளவில் மணல் அகழப்படுவதாக்ந் அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.
அதிகபடியான மணல் அனுமதிப்பத்திரங்கள் வெளி மாவட்டத்தின்ருக்கு வழங்கப்படுவதால் குறித்தசெயற்பாட்டின் காரணமாக அப்பகுதி வாசிகளது வாகழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பாக அப்பகுதியின் மண் வழமானது அழவிற்கதிகளவில் களவாடப்படுவதால் குறித்த பகுதியானது நீரினுள் மூழ்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட இருப்பதாக தெரிவித்தனர்.
நாதன் ஓடை எனும் பகுதியில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தின் காரணமாக அங்கு ஒரு அணை ஒன்றினை கட்டுவதற்காக தாம் பலமுறை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை அரசு அமைத்துத் தராதபட்சத்தில் தனி நபர் ஒருவர் அதனை கட்டுவதற்கு முன்வந்த நிலையில் குறித்த கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தறுவாயில் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் நாடாளுமன்ற ஒருவர் தனது தன்னிச்சையான அதிகாரஙகளை பயன்படுத்தி குறித்த கட்டுமாணப் பணிகளை நிறுத்தியிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றினையும் பிரதேச செயலகத்தில் கையளித்தனர்.