கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு அதிக அக்கறை கொண்டுள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது ஒரு உடனடி ஆபத்தின் முன் எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும் அவர் இன்று (செவ்வாய்ய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதை தீவிரமாக கவனத்தில்கொள்வது முற்றிலும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
தொற்றுநோயியல் பிரிவில் ஒரு தனி குழு உள்ளது, இது ஏன் இறப்பு அதிகரித்தது என்பதை ஆய்வு செய்ய உள்ளது. இது தொடர்பான அறிக்கையை எதிர்காலத்தில் பெறுவோம் என்று அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், குறிப்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.