இந்தியாவில் தற்போதுள்ள ஆறு ஆயிரம் கிரிப்டோகரன்சிகளில் கையளவு மட்டுமே அனுமதிக்கப்படும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
பிட்கொய்ன் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமியற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ இது குறித்து தெரிவித்துள்ள ரகுராம் ராஜன்இ ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிக்டல் நாணயத்தை வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த 2 கோடி இந்தியர்கள் மத்தியில் குழப்பநிலை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.