இந்தியா மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
கன்பூர் மைதானத்தில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 345 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 105 ஓட்டங்களையும் சுப்மான் கில் 52 ஓட்டங்களையும் ஜடஜோ 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 5 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமிஸன் 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் லதம் 95 ஓட்டங்களையும் வில் யங் 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அகஸர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 49 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால் நியூஸிலாந்து அணிக்கு 284 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 65 ஓட்டங்களையும் சஹா ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சவுத்தீ மற்றும் ஜேமிஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 284 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இறுதிநாள் முடிவு வரை 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் லதம் 52 ஓட்டங்களையும் வில்லியம் சோமர்வில்லே 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 105 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஸ்ரேயஸ் ஐயர் பதிவுசெய்யப்பட்டார்.