இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார் 7:35 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. அதன்பின்னர் நேற்றிரவு 9.00 மணியளவில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொத்மலை கிரிட் துணை மின் நிலையத்திலிருந்து பியகம கிரிட் துணை மின் நிலையத்திற்கு அனுப்பும் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.