இலங்கையில் தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த இரு மாதங்களாக நிலவிரும் மழையுடனான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 561 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று(புதன்கிழமை) மாத்திரம் 117 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், தசை வலி போன்ற சில அறிகுறிகள் கோவிட் மற்றும் டெங்கு ஆகிய இரண்டிலும் காணப்படலாம் என்பதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.