மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதாவது ஆசாத் சாலியை, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து, விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் ஆசாத் சாலி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை, முறைப்பாட்டாளர்கள் நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி இதன்போது கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியமையினால் குற்றவாளியை அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.