லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எரிவாயு விநியோகம் செய்வதற்காக கொழும்பை வந்தடைந்த கப்பலில் இருந்து இரண்டு தனிப்பட்ட எரிவாயு மாதிரிகளை பெற்றுக்கொண்டதாக இலங்கை அங்கீகார சபை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
குறித்த எரிவாயு மாதிரிகளின் சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை சரக்குகளை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
















