ரி-10 தொடரின் 29ஆவது லீக் போட்டியில், பங்களா டைகர்ஸ் அணி 30 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பங்களா டைகர்ஸ் அணியும் நோதர்ன் வோரியஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோதர்ன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களா டைகர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 1 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹஸ்ரதுல்லா சஷாய் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் டு பிளெஸிஸ் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நோதர்ன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், இம்ரான் தாஹீர் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 120 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நோதர்ன் வோரியஸ் அணியால், 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பங்களா டைகர்ஸ் அணி 30 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக உமைர் அலி ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் சமித் பட்டேல் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களா டைகர்ஸ் அணியின் பந்துவீச்சில், டொம் ஹாட்லீ 2 விக்கெட்டுகளையும் லுக் பிளெட்சர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹஸ்ரதுல்லா சஷாய் தெரிவுசெய்யப்பட்டார்.