பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதும் பொருளாதாரத்தை உறுதி செய்வதும் முக்கியமானது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் பாராட்டத்தக்க நிலையில் இருந்ததாக குறிப்பிட்டார்.
போருக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இலங்கை பொருளாதாரத்தில் புதிய மைக்கல்லை எட்டியது என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும் இவ்வாறான சாதனைகளை நிகழ்த்தியதில்லை என குறிப்பிட்ட அமைச்சர், இருப்பினும் அண்மைக்காலமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
எனவே அதிகாரிகள் வழங்கிய தரவுகளை மதிப்பீடு செய்து தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.