தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9 மேலதிக வாக்குளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
வவுனியா வடக்குபிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
கடந்தமாதம் இடம்பெற்ற அமர்வில் சபையின் 2022 ஆம் ஆண்டிறக்கான பாதீடு முன்வைக்கப்பட்ட நிலையில் அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றையதினம் அது மீளவும் முன்வைக்கப்பட்டது.
இதன்போது மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த வரவுசெலவுத்திட்டத்தினை தோற்கடிக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வி.சஞ்சுதன், கருத்து தெரிவித்தார். அவரது கருத்தினை தமிழர்விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர் முகுந்தன் வழிமொழிந்தார்.
அனேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
அந்தவகையில் பாதீட்டுக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜனபெரமுன, ஜக்கியதேசிய கட்சி,சுதந்திரக்கட்சி தமிழ் தேசியமக்கள் முண்ணனி,சுயேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 17உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 8 உறுப்பினர்களும் ஐக்கியதேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்திருந்தனர். இதனால் 9 மேலதிக வாக்குகளால் 2022 ஆம் ஆண்டிற்கான சபையின் பாதீடு இரண்டாவது முறையாகவும் பெரும்பாண்மை வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது.
இந்நிலையில் உள்ளூராட்சி சட்டங்களின்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது ஊடகவியலாளர்கள் குறித்த அமர்வை செய்தியாக தலைவரிடம் தொலைபேசியில் அனுமதி பெற்றிருந்தனர்.
எனினும் சபையில் தொலைபேசி பாவனை தொடர்பான குழப்பம் ஏற்பட்டபோது பெதுஜன பெரமுன உறுப்பினரொருவர் ஊடகங்கள் வீடியோ பதிவு செய்யும் போது தொலைபேசி ஏன் பயன்படுத்த முடியாது. உங்களால் முடிந்தால் அவர்களை வெளியில் செல்லுமாறு கூறுங்கள் கன தலைவரை பார்த்து கேட்டார்.
தலைவர் முன் அனுமதி பெறவில்லை எனவே ஊடகங்கள் வெளியேற வேண்டும் என்றார். எனினும் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் அனுமதி கேட்டோம் என தெரிவித்தனர்.
எனினும் ஊடகங்களை கூட்டம் முடிந்ததன் பின்னர் சந்திப்பதாக தலைவர் கூறியதை அடுத்து ஊடகவியலாளர்கள் வெளியேறிய பின்னர் பாதீட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.