வவுனியா நகரப்பகுதியிலுள்ள வீடொன்றில், பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த வேளையில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா- சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள வீட்டில் வசித்து வரும் பெண், இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்தபோது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
மேலும் எரிவாயு சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும் முன் எச்சரிக்கையுடனும் குறித்த பெண் இருந்தமையால், உடனடியாக அடுப்பை அணைத்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தினால் எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியுள்ளது. இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார், இது தொடர்பில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.