களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் வீசப்படும் ஆயிரத்து 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான இடங்களை கடற்படையின் உதவியுடன், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று(வியாழக்கிழமை) கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
“ஆறுகளை பாதுகாப்போம்“ திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டில் களனி கங்கையின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிக்கவும் குறிப்பிடப்படுகின்றது.