மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், இந்த விண்வெளித் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா நான்காவது இடத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்த திட்டம் தாமதமாகியுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் 2023 ஆம் ஆண்டில் 3 பேரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன்னதாக ஆளில்லா விமானங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.