மலையகத்தில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால், தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தபால் சேவை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை, இன்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை தபால் சேவை மற்றும் தொலைத் தொடர்பு ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, புதிய சேவை சட்டமூலமொன்றை ஸ்தாபித்தல், சனிக்கிழமை கொடுப்பனவில் 20 வீதத்தை வழங்குதல், வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற 16 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.