அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்தாலும் உள்கட்சிப் பிரச்சினைகளால் போராடி வருவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, தலைமைத்துவ மாற்றம் தேவையென ஆளும் தரப்பினர் கருதுவதாக கூறினார்.
அத்தோடு தற்போதுள்ள ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே ஆளும் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களின் கருத்து என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் ஆளும்தரப்பில் உள்ள 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளால் விரக்தியடைந்துள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள், தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்ல வெட்கப்படுவதாகவும் மயந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.