கெரவலபிட்டிய உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள போதிலும், அந்த பரிந்துரைகள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்ணனி சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, இந்த ஒப்பந்தம் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்தார்.
இந்த நிறுவனம் முதலில் ஸ்ரீலங்கா ஹோல்டிங்ஸ் என குறிப்பிடப்பட்டதாக தெரிவித்த அவர், மத்திய வங்கியின் நாணயச் சபையின் கடிதத்தை பரிசீலிக்காமல் சட்டமா அதிபர் எவ்வாறு ஒப்பந்தத்தை அங்கீகரித்தார் என்றும் கேள்வியெழுப்பினார்.
எவ்வாறாயினும், குறித்த உடன்படிக்கையில் சட்டமா அதிபரின் அனுமதியை நியாயப்படுத்தும் ஆவணங்கள் இல்லை என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால், இலங்கையில் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாத ஒரு சரத்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.