இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க வேண்டும் என இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எந்த நாடு பாதுகாப்பு துறையில் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்குகிறதோ, அந்த நாடு தான் எதிரிகளை அழித்து வரலாற்றில் இடம் பிடிக்கும்.
எனவே நாம் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும். அதற்கு நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்வது அவசியம்.
புதிய கண்டுப்பிடிப்புகள் அத்தகைய வலிமையை வழங்கும். அதற்கு ஒலியை வட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை தயாரிப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.