வடமராட்சி கிழக்கு- வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், இன்று (வியாழக்கிழமை) ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த இளம் குடும்பம், தமது நேற்றிக்கடன்களை நிறைவேற்றுவதற்க்காக சென்று, அங்கு தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் கட்டைக்காட்டை சேர்ந்த இளைஞன் வினோத் என்பவர் பலத்த படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தில் குறித்த நபரின் மனைவிக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன், அவர்களது மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலய முகப்பு இடிந்து விழுந்ததிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















