நாட்டில் அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத பின்னணியில் சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமைக்கு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நெருக்கடியான காலங்களில் எவராவது நாட்டை விட்டு வெளியேறுவார்களா என்றும் கேள்வியெழுப்பினார்.
அரசாங்கத்தை அமைக்கும் போது துறைசார்ந்த அறிவும், புரிதலும் இருப்பவர்களை அருகில் வைத்துக்கொண்டிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உருவாகியிருக்காது என்பது இதில் புலப்படுவதாகவும் சுசில் பிரேமஜயந்த சாடினார்.
மேலும் யுத்த காலத்தில் ஐந்து வருடங்கள் கல்வி அமைச்சராக தாம் பதவி வகித்ததாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அந்த நேரத்தில் எந்தவொரு பிரச்சினையும் இன்றி தனது கடமைகளை ஆற்ற முடிந்ததாகத் தெரிவித்தார்.