கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதனை கூறினார்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாளாந்தம் 500 முதல் 700 நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், சுமார் 20 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
இதவேளை ஒமிக்ரோன் மாறுபாட்டின் வீரியம் குறித்து அறியாமல் பண்டிகை காலத்திற்கு முன்னரே மக்கள் அதிகளவில் கூடுவதாக வைத்தியர் கவலை வெளியிட்டார்.