ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துள்ள நிலையில் 500 மில்லியன் கொரோனா பரிசோதனைக் கருவிகளை மக்களுக்கு இலவசமாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதனை வழங்கும் பணியில் தேவைப்பட்டால் இராணுவ மருத்துவப் பிரிவினர் ஈடுபடுத்தப்படுவர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்படும் நோயாளிகளில் கிட்டத்தட்ட 75 விகிதமானவர்களிடையே ஒமிக்ரோன் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை கருதிக்கொண்டு அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சமூக இடைவெளி மற்றும் முக்கவசம் அணிய வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு செல்லலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.