கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தேவை ஏற்பட்டால் கிறிஸ்மஸுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என கூறினார்.
ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் தடுப்பூசிகளின் தாக்கம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொண்டாலும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டார்.
ஸ்கொட்லாந்தில் பொது நிகழ்வுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.