கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும்.
இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந்நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால் ஐரோப்பிய நடுகளுக்கு குடியேறும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.