யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை வகுப்பறையினை புனரமைப்பு செய்ய பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை கூரை சேதமடைந்துள்ள நிலையில், மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத நிலைமை காணப்பட்டது.
இது தொடர்பில் செந்தில் தொண்டமானின் கனவத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இப்பாடசாலைக்கான திருத்தப்பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செந்தில் தொண்டமான், குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று திருத்தப்பணிகளை பார்வையிட்டுள்ளார்.
விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.