வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
ஆனால் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொய்யாகவோ அல்லது நிறைவேற்றாவிட்டாலோ நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட மீனவர்களினால் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யாழ். மாவட்ட மீனவர்களால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் நேரடியாக வருகை தந்து சில உறுதிமொழிகளை அளித்து இந்த போராட்டத்தினை நிறுத்தியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
மீனவர்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை கடற்றொழில் அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்க தயார்.
ஆனால் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொய்யாகவோ அல்லது நிறைவேற்றாவிட்டாலோ நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும்” என மேலும் தெரிவித்துள்ளார்.