விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீர்கொழும்பு – கட்டான பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்மலானையில் இருந்து சீகிரியாவிற்கு சுற்றுலா பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் கொக்கலை நோக்கி பயணித்த போது இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்த கட்டுநாயக்க விமானப்படையின் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.