நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.
ஜனவரி 24ஆம் திகதி வரை எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், மின்சார சபைக்கு பிரச்சினை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரான எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியை இலங்கை மின்சார சபை பெற முடியாவிட்டால், மின் உற்பத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.