அமெரிக்க மாகாணமான கொலராடோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீ அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்து சாம்பலாக்கியது.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வேறு இடத்திற்கு இடமாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மணிக்கு 105 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் போல்டருக்கு அருகே உள்ள லூயிஸ்வில் மற்றும் சுப்பூரியர் என்ற இரண்டு நகரங்களில் காட்டுத்தீ மிகவும் வேகமாக பரவியது
580 க்கும் மேற்பட்ட வீடுகள், உணவகங்கள், கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
நவீன வரலாற்றில இவ்வளவு மோசமான இயற்கை பேரிடரை இந்த மாகாணம் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
மிகவும் விரைவாக தீ பரவியதால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விபத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போல்டரின் ஷெரிஃப் கூறியுள்ளார்.