காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா மீது ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாக்தாத்தில் தூதரகப் பணியில் இருந்தபோது, அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
இந்த விடயத்தில் அமெரிக்க அரசாங்கத்தை கண்டிக்க ஈரானின் ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பிரிவு, ஐ.நா பொதுச் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அமெரிக்க அரசாங்கங்கள், பல ஆண்டுகளாக, சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீறும் அதிகாரத்தை ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாளை ஜனவரி 3 ஆம் திகதி சுலைமானி கொல்லப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இடமபெறவுள்ள நிலையில் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.