ஒமிக்ரோன் பரவலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் ஒமிக்ரோன் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, இலங்கையில் இதுவரை 48 ஒமிக்ரோன் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பு, பதுளை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்கள் போன்ற நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஒமிக்ரோன் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஒமிக்ரோன் நோயாளிகளின் தொடர்புகள் கண்டறியப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தடுப்பூசியின் காரணமாக ஒமிக்ரோன்; பரவல் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது எனவும் வைத்தியர்; ஹம்தானி மேலும் கூறினார்.
எனவே, எந்த தாமதமும் இன்றி பூஸ்டர் டோஸ் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் 25வீத பேர் மட்டுமே பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் என்று தெரிவித்த அவர், எதிர்வரும்; வாரங்களிலும் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.