கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ குழுவினர் 2022ம் ஆண்டு தை 01ம் திகதி முதல் நாட்பட்ட நோயாளர்கள் மற்றும் படுக்கை நோயில் உள்ளோருக்கான மருத்துல தேவைகளை அவரவர் வீடுகளிற்கு சென்று பூர்த்தி செய்யும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்புவோர் 0212283037 எனும் தொலைபேசி இயக்கத்திற்கு அழைத்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த நடமாடும் வைத்திட சேவையானது கீழ்வரும் 24 கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அமைவாக, பொன்நகர், பாரதிபுரம், மலையாளபுரம், விவேகாநந்தாநகர், கிருஸ்ணபுரம், உதயநகர் கிழக்கு, உதயநகர் மேற்கு, அம்பாள்குளம், ஆனந்தபுரம், தொண்டமான் நகர், கனகாம்பிகைகுளம், அம்பாள நகர், திருவையாறு, திருவையாறு மேற்கு, இரத்தினபுரம், கிளிநொச்சி நகர், மருதநகர், பன்னங்கண்டி, கனகபுரம், திருநகர் தெற்கு, திருநகர் வடக்கு, கணேசபுரம், ஜெயந்திநகர், பெரிய பரந்தன் பகுதிகளில் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேவையை பெற்றுக்கொள்ள விரும்புவோர் மேற்குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து குறித்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சி வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த சேவையை செல்வபுரம், இந்துபுரம், வசந்தநகர், முறிகண்டி ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களிற்கும் விஸ்தரிக்குமாறும், குறித்த பகுதி மக்கள் கிளிநொச்சி வைத்தியசாலையிலேயே வைத்திய தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும், மாங்குளம் ஆதார வைத்தியசாலை 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளிநொச்சி வைத்தியசாலையின் குறித்த சேவையை தமக்கும் வழங்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.