அதிநவீன பீரங்கிகளை இந்தியாவிற்கு வழங்க பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி லெக்லர்க் பீரங்கிகளை வழங்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ரஷ்யாவின் டி72 ரக பீரங்கிகளுக்கு பதிலாக 5 பில்லியன் டொலர் மதிப்பில் 1770 பீரங்கிகள் பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ரஷ்யா, இஸ்ரேல், ஐரோப்பா, துருக்கி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 12 நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு நெக்ஸ்டர் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.