பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக சந்தேகிப்பவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றத்தின் தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த உளவு மென்பொருள் மூலமாக தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக யாரேனும் சந்தேகித்தால் வரும் ஏழாம் திகதிக்குள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முறைப்பாடு செய்பவர்கள் எதன் அடிப்படையில் கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக கருதுகிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தங்கள் கைப்பேசியை பரிசோதனைக்கு அனுமதிக்கிறார்களா என்பதையும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.