அவசியமான நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்காது தவறவிட்டமையே நாடு நெருக்கடிக்குள் சிக்க காரணம் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நெருக்கடியான நிலைமைகளில் எடுக்கக் கூடாத தீர்மானங்களை எடுப்பதும் அனாவசியமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற செயற்பாடுகளே இன்று நாடு நெருக்கடியில் சிக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தரப்பில் இருந்தாலும் அதன் செயற்பாடுகளில் திருப்தியில்லை என்பதை வெளிப்படையாக கூறியுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு சிலர் எடுக்கும் தவறான தீர்மானங்களே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக அரசாங்கத்தில் இருந்தாலும் தீர்மானம் எடுக்கும் இடத்தில் தாம் இல்லை என்றும் தவறான கொள்கைகளை உருவாக்கி அதற்கு ஏற்றால் போல் முட்டாள் தனமாக தீர்மானங்களை எடுத்தவர்கள் மக்களுக்கு பதில் கூறியாக வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே தீர்மானங்களை எடுப்பதால் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாது என குறிப்பிட்ட சுசில் பிரேமஜயந்த, அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கும் நபர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.