தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த குறித்த யோசனை தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார்களுடன் அமைச்சு தற்போது கலந்துரையாடி வருவதாக அவர் கூறினார்.
இன்று (திங்கட்கிழமை) தொழிலாளர் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான காப்புறுதி வழங்கல் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கான சட்ட கட்டமைப்புகள் நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.