தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அரசியலமைப்புக்கு முரணானது என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் கீழ் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யாதவர்கள் தமது பதவிகளில் செயற்பட முடியாது என குறிப்பிட்டார்.
தற்போதைய நிதியமைச்சர் மாத்திரமே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.
எனவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்யாதவர்களுக்கு தமது பதவிகளில் செயற்பட அதிகாரம் இல்லை எனவும் சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கெரவலபிட்டிய மின்னுருப்பதி நிலையம், துறைமுக நகர ஒப்பந்தங்கள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டுக்கு கையளித்தமை உள்ளிட்ட அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானவை என குறிப்பிட்டார்.