காலி முகத்திடல் கிரீன் வாகன நிறுத்துமிடம், நேற்று (புதன்கிழமை) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொற்றுநோய்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே வாகன நிறுத்துமிடங்கள் மூடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை எந்ததொரு உள்நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொற்றுநோயின்போது நாங்கள் பொது மக்களை காலி முகத்திடலில் கூடுவதை ஊக்கப்படுத்தினோம். இதன் விளைவாகவே வாகன நிறுத்துமிடங்களையும் மூடிவிட்டோம். ஏனெனில் அது திறந்திருப்பது அப்பகுதியில் நெரிசலை உருவாக்கும் என்பதேயாகும் என நிஹால் தல்துவா சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் காலி முகத்திடல் கிரீன் வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டதற்கு ஒரே காரணம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலேயாகும். ஆனாலும் தற்போது குறித்த பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.