டிசம்பர் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் இலக்கை, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் தவறவிட்டுள்ளன.
ஆபிரிக்க கண்டம் முழுவதும் இதுவரை 9 சதவித மக்கள் மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்திலேயே ஏழு நாடுகள் மட்டுமே 40 சதவீத இலக்கை எட்டியுள்ளன. அதிலும் மூன்று நாடுகள் சிறு தீவுகள், அங்கு போக்குவரத்து சிக்கல்கள் பெரிதாக இல்லை.
செய்சில்லெஸ், மொரீஷஸ் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கேப் வெர்டே நாட்டில் கிட்டத்தட்ட 45 சதவீத பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
அதுபோக, ஆபிரிக்க கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ள நாடுகளில் மொராக்கோ, துனீசியா, போட்ஸ்வானா, ருவாண்டா ஆகிய நாடுகள் மட்டுமே இலக்கை கடந்துள்ளன.
ஆபிரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள், சகாராவுக்கு கீழே உள்ள ஆபிரிக்க நாடுகளை விட ஒப்பீட்டளவில் சிறப்பாக செயற்பட்டுள்ளன.
டிசம்பர் 30ஆம் திகதி நிலவரப்படி, ஆபிரிக்க கண்டத்தில் உள்ள கிட்டத்தட்ட பாதி நாடுகள், சுமார் 10 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளில் (அக்கண்டத்தின் பெரிய நாடுகளும் இதில் அடக்கம்) மொத்த மக்கள் தொகையில் 5 சதவீத பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.