இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் புதிய வகைகளில் உருமாறி வருவதால் பரிசோதனை, தடுப்பூசியிலும் மாற்றங்கள் செய்வது குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை தற்போதைய புதிய இயல்பாக மாறியுள்ளன. வைரஸ் பரவல் வேகத்தை தடுக்கும். மேலும் தடுப்பூசியும் முக்கிய கவசமாக செயல்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.