நாட்டிற்கு இவ்வருடம் ஜனவரி முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 16 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக விமான நிலையத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையம் நிறுவப்பட்டுள்ளதாக கூறினார்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பது என்ற இரட்டை சவாலை அரசாங்கம் எதிர்கொள்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.