இந்தியா – பிரித்தானியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரித்தானியா இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், இதற்கு பிரித்தானியா சம்மதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வர்த்தக் அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.