இந்தியாவின் பொருளாதாரம் திடமான பாதையில் மீண்டு வருவதாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
விரைவான தடுப்பூசி முன்னேற்றம், கடுமையான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு நடுவே நாட்டின் பொருளாதாரம் திடமான பாதையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நிலப் பற்றாக்குறை மற்றும் அதிகரிக்கும் எண்ணெய் விலைகள் ஆகியவை பொருளாதார நடவடிக்கைகளுக்கு தடையை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.